Tuesday, February 6, 2007

ஷேவாக் மீது புகார்

ஷேவாக் சர்ச்சை



நடக்கவிருக்கும் இலங்கையுடனான ஒரு நாள் போட்டித்தொடரில் ஷேவாக் இடம்பிடித்திருக்கும் நிலையில் அவர் மீதான புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய இந்திய அணியின் மேனேஜரான சேத்தன் தேசாய், பி.சி.சி.ஐ.க்கு சமர்பித்துள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் ஷேவாகின் ஒழுங்கீனம் மற்றும் நடத்தை பற்றிய புகாரை எழுப்பியுள்ளார். இதற்கு உதாரணமாக டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.

அன்று பேட்டிங் செய்யவிருந்த ஷேவாக் தனக்கு மேலும் சிறிது பேட்டிங் பயிற்சி தேவைப்படுகிறது என்றும் அதற்காக மைதானத்திற்கு காலை 6.30 மணிக்கு வருமாறும் அணியின் பயிற்சியாளர் சாப்பலிடம் தெரிவித்தார். அதன்படி காலை 6.30 மணிக்கு சாப்பலும் அவரின் உதவியாளர் ஃப்ரேசரும் வந்து காத்திருந்தனர். ஆனால் ஷேவாக் வரவில்லை.இதைப்ப்ற்றி கேட்டபொழுது தான் பயிற்சி செய்யும் மனநிலையில் இல்லையென்றும் அதனால் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது மிகவும் கண்டனத்துகுரிய செயலாகும். பி.சி.சி.ஐ.யிடம் சமர்ப்பித்துள்ள எனது அறிக்கையில் இதைப்பற்றி தெரிவித்துள்ளேன் என்றும் தேசாய் கூறியுள்ளார்.

இது தவிர வேறு ஏதும் புகாராக் தெரிவிக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.

ஷேவாக் மீது ஒழுங்கீன நடவடிக்கை பாயுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

***********************



இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 4 ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 8ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா வரும் இந்திய அணியின் பயிற்ச்சியாளர் க்ரெக் சாப்பலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை ஆணையர் முகர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் புவனேஷ்வர் விமானநிலையத்தில் சாப்பலின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

************************



காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதி தகுதிச் சுற்றுப் போட்டியில் இங்கிலந்து அணி நியூசிலாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் காலிங்வுட் 106 ரன்கள் அடித்தார். நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் ஃபெளிமிஃங் 106 ரன்கள் குவித்தார். இத்தொடரின் முதல் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

**************************



தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஒரு நாள் போட்டித்தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் ராவ் இஃப்திகார் பயணம்.சமீபத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 164 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் காயமடைந்த(?) பாகிஸ்தான் வீரர்களான் அக்தர்,உமர் குல்,ஷப்பிர் அஹமத் தாயகம் திரும்பியதால்,இஃப்திகார் அங்கு சென்றுள்ளார்.

8 comments:

Naufal MQ said...

செய்திகளை முந்தித் தரும் மணிகண்டனுக்கு ஒரு 'ஓ'.

மு.கார்த்திகேயன் said...

ஒரே நாளில் இத்தனை பதிவுகளா? மணிகண்டன், ஸ்போர்ட்ஸ்டார் தோத்தது போப்பா

மணிகண்டன் said...

//செய்திகளை முந்தித் தரும் மணிகண்டனுக்கு ஒரு 'ஓ'.//

ஓ போட்டதுக்கும் பின்னூட்டமிதுக்கும் நன்றி bowler அவர்களே.அப்பப்ப வந்து ஒரு பவுன்சர் போட்டுட்டு போங்க..

மணிகண்டன் said...

//ஒரே நாளில் இத்தனை பதிவுகளா? மணிகண்டன், ஸ்போர்ட்ஸ்டார் தோத்தது போப்பா //

என்னங்க பன்றது கார்த்தி, ஆப்பிசில ஆணியெல்லாம் புடுங்கியாச்சு :)

கார்த்திக் பிரபு said...

good post ..pls change the background color

மணிகண்டன் said...

//good post ..pls change the background color //

மாத்தியாச்சுங்க..

AANDHREYE said...

Its a timely initiative...

All the very best and thanks for keeping things simple and interesting...

http://kirikket.blogspot.com/
was started by few interested souls...and dropped on the way...theres no happenings in this blog since Oct'06...

My suggestion would be...
mmmhhhh. I dont have any.... :o))

Thanks once again...
aandhreye

மணிகண்டன் said...

AANDHREYE

If you are interested you can contribute to this blog too.