Thursday, February 8, 2007

மறக்க முடியுமா - 2



ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இந்தியா ஜெயிச்ச ஒரே உலகக்கோப்பை.இதுக்கு முன்னால நடந்த 2 உலகக்கோப்பையிலும் சேர்த்து இந்தியா ஒரே ஒரு போட்டியில தான் ஜெயிச்சிருந்துச்சு (1975ல கிழக்கு ஆப்பிரிக்கா அணியோட).

அதனால 1983ல நடந்த உலகக்கோப்பையில அவ்வளவா எதிர்பார்ப்பு இல்லாத ஒரு அணியாதான் நுழைஞ்சுது.ஆனா யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விளையாடி, இறுதி வரைக்கும் வந்துது. இறுதிப் போட்டியில அப்போதைய ஜாம்பவானான மேற்கிந்தியத்தீவுகளை
140 ரன்னுக்கு சுருட்டி 43 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சு கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில்தேவ் கோப்பையை வாங்கும் காட்சி..



இந்தியா மறுபடியும் ஜெயிக்க ஒரு + போட்டுட்டு போங்க..புண்ணியாமா போவும்.

நினைவுகள் தொடரும்..

4 comments:

மு.கார்த்திகேயன் said...

கங்கணம் கட்டி பதிவுகளை போடுறீங்கன்னு நினைக்கிறேன் மணிகண்டன்..

சும்மா அடுச்சு தள்றீங்க.. டெண்டுல்கர் கையில் கிடைத்த பந்தை போல..

ஒவ்வொரும் விஷயமும் அருமை..

நடத்துங்கள் உங்கள் கிரிக்கட் ஊர்வலத்தை, மணிகண்டன்

மணிகண்டன் said...

அப்படியெல்லாம் இல்லைங்க கார்த்தி.

அப்பப்ப பார்க்கறத,படிக்கறத போடறேன்.

VSK said...

++++++
ஒண்ணு என்ன, நிறையவே தரேன், மணிகண்டன்!:))

உலகக் கோப்பை தொடங்கும் வரை, உலகக் கோப்பை தொடங்கியதன் வரலாறு, இதுவரை வென்றவர்கள், இப்போது வரும் போட்டியில் பங்கு கொள்ளப் போகும் நாடுகள், வீரர்கள், கவனிக்கப்பட வேண்டியவர்கள், பலங்கள், பலவீனங்கள் என விளாசலாமே!

மணிகண்டன் said...

நன்றி SK ஐயா.

இந்த உலகக்கோப்பையின் புது வரவுகளான நாடுகள் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேனே பார்த்தீர்களா??

http://wcup2007.blogspot.com/2007/02/blog-post_06.html