Tuesday, February 13, 2007

இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ?



Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது.


விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக :)


8 comments:

ஆதிபகவன் said...

நிஜத்தைத்தான் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் யார் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவது.

மணிகண்டன் said...

உண்மைதான் ஆதிபகவன். ஒரு சதமடித்தவுடன் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இந்நிலை எப்பொழுது மாறுமோ?

சிறில் அலெக்ஸ் said...

சிக்சர்!!!

மணிகண்டன் said...

வாங்க சிறில், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..

Anonymous said...

என்ன வச்சி காமெடி கீமேடி எதுவும் பண்ணலயே?

Anonymous said...

இதெல்லாம் ரொம்ப ஓவர்! சொல்லிட்டேன்!

மணிகண்டன் said...

//இதெல்லாம் ரொம்ப ஓவர்! சொல்லிட்டேன்! //

எதுங்க ரொம்ப ஓவர்??

Sridhar V said...

முதலில் தலைப்பு. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்து(ம்) கொண்டுதான் இருக்கிறது. ஏனிந்த pessimistic பார்வை என்று தெரியவில்லை. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். வெற்றி மட்டுமே பெற்று கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால் அதற்காக தொடர்ந்து தோற்கின்ற அணி இல்லை என்பது எல்லாருக்குமே தெரியும்.

அந்த வீடியோ ஏதோ நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் ஆதங்கம் புரியவில்லை.

//ஒரு சதமடித்தவுடன் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன. இந்நிலை எப்பொழுது மாறுமோ?//

அவர்கள் வணிக நோக்கத்திற்கு விளம்பரம் செய்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் அதில் தோன்றுவதற்கு நல்ல பணம் தருகிறார்கள். அவ்வளவுதானே! விளம்பர படங்களில் நடிப்பதால் விளையாட்டு திறன் பாதிக்க படுகிறது என்று எங்கேயும் புகார் இல்லையே... அப்படி பார்த்தால் Golf வீரர் Tiger Woods, formula போட்டிகளில் பங்கேற்கும் கார் வீரர்கள், கால்பந்தாட்ட வீரர்கள் ஏனையோர்தான் பெரிதும் பாதிக்க பட்டிருப்பனர்.

இந்த விளம்பர ஒப்பந்தங்களில் ஒரு முக்கிய clause உண்டு. அந்த விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆறு மாதம் விளையாடா விட்டால் ஒப்பந்தம் காலாவதியாகிவிடும்.

இன்னொரு முக்கிய விஷயம், இந்த விளையாட்டு வீரர்களுக்கு முப்பது வயதுக்கு மேல் விளையாட்டு துறையில் வசந்த காலம் இல்லை. அதற்குள் அவர்கள் சம்பாதித்தால்தான் உண்டு. அவர்களின் இளமை காலம் முழுவதும் அவர்கள் செல்வழிப்பது விளையாட்டுக்கும் அதற்கு தங்களை தயார்படுத்தி கொள்வதற்கும்தான். பலருக்கு படிப்பு எல்லாம் பெரிதாக கிடையாது (சச்சின் டெண்டுல்கர், கல்லூரி கூட செல்லவில்லை). விளம்பரத்தில் நடிக்க கூடாது என்றெல்லாம் சொல்ல என்ன காரணம் இருக்கிறது என்று தெரியவில்லை.

விளையாட்டில் சாதிக்க வில்லையென்றால் அணியை விட்டு நீக்கட்டும். தொடர்ந்து 16-18 ஆண்டுகள் சர்வதேச அளவில் விளையாடும் திறமையோடு, இப்படிப்பட்ட உணர்ச்சி வசப்படும் 100 கோடி ரசிகர்களின் எதிர் பார்ப்போடு போட்டியிடுவதே ஒரு இமாலய சாதனை.

இந்திய அணி தோற்கவே தோற்காத invincible அணியாக மாறுவதற்கு பல வழிகள் இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் அதிகமாக சம்பாதிப்பதுதான் காரணம் என்பது சிறு பிள்ளைத்தனமான வாதம் என்றுதான் தோன்றுகிறது.