Monday, March 19, 2007

பாதிக் கிணறு தாண்டியாச்சு !



இன்னைக்கு பெர்முடாவை தோற்கடிச்சு பாதிக்கிணறு தாண்டி இருக்கு இந்தியா. ஆனா மீதி பாதியை தாண்டறது தான் கஷ்டமான விஷயம். அதையும் தாண்டலைன்னா வெளியேறவேண்டியது தான்.






பெர்முடாவுக்கு எதிரா 413 ரன் அடிச்சு உலகக்கோப்பையில சாதனை பண்ணியிருக்கு இந்தியா. இதுவரைக்கும் உலகக்கோப்பைல கென்யாவுக்கு எதிரா இலங்கை அடிச்ச 398 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரா இருந்தது. இன்னைக்கு அதை முறியடிச்சுது இந்தியா. அதே மாதிரி ஒரு இன்னிங்ஸ்ல 18 ஸிக்ஸ் அடிச்ச தென்னாப்பிரிக்காவோட சாதனையையும் சமன் செஞ்சிருக்கு. அதே போல் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைச்சிருக்கு. இதெல்லாம் பெர்முடாவுக்கு எதிராதான்னாலும், நம்ம அணியினருக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் தந்திருக்கும் இந்த வெற்றி.






ஷேவாக் இன்னைக்கு சதமடிச்சாலும், இலங்கையின் தரமான பந்து வீச்சுக்கு எதிரா தாக்குப்பிடிப்பாரான்னு தெரியலை. அதே மாதிரி இந்தியாவோட பவுலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னமும் முன்னேறனும். பெர்முடா கிட்டே ஒப்பேத்தின மாதிரி இலங்கை கிட்ட பண்ண முடியாது. என்னைக்கேட்டா அடுத்த போட்டில அகர்கருக்கு பதிலா பதானை கொண்டு வரலாம். மூனு விக்கெட் எடுத்திருந்தாலும் அவ்வளவு சிறப்பா அவர் பந்து வீசின மாதிரி தெரியலை. பதான் பேட்டிங்கும் கொஞ்சம் பண்ணுவாரு. அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.








சரி, இனி மீதி கினறு தாண்ட என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?



இன்று பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சற்று ஆறுதல் தந்துள்ளது இந்தியா. இன்றைய நிலவரப்படி இலங்கையின் நெட் ரன்ரேட் 4.86, இந்தியா 2.5, பங்களாதேஷ் 0.14. மூன்று அணிகளும் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

சாத்தியக்கூறு - 1
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கை பங்களாதேஷை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்த புள்ளிகள் நான்காகும். இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் பெர்முடாவை வெல்லும் பட்சத்தில் அதுவும் நான்கு புள்ளிகள் பெற்றிருக்க்கும். இந்நிலையில் மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் இருப்பதால் சிறந்த நெட் ரன்ரேட் உள்ள முதலிரு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும். இதன்படி இந்தியா அடுத்த போட்டியில் வெல்வதுடன், சிறந்த ரன்ரேட் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் இலங்கை 250 ரன்கள் அடித்து பங்களாதேஷை 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால், இலங்கையின் நெட்ரன்ரேட் 2.93 ஆக இருக்கும். இலங்கை 300 ரன்கள் அடித்து பங்களாதேஷ் 200 ரன்களுக்கு அவுட்டாக்கினால் 3.43 ஆக இருக்கும். இந்நிலையில் இந்தியா இலங்கையை குறைந்தது 100 ரன்கள் அல்லது 15 ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வெள்ளியன்றே அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இல்லையேல் ஞாயிறன்று நடைபெரும் பங்களாதேஷ்-பெர்முடா போட்டியின் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

சாத்தியக்கூறு - 2
புதனன்று நடைபெறும் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் வென்றால் 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளாகும். இந்நிலையில் பங்களாதெஷ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி . இந்தியா இலங்கை இரு அணிகளும்
மோதும் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 3
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளும் ஒரு புள்ளி பெற்று மொத்தம் மூன்று புள்ளிகளாகும்.இந்நிலையில் இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

சாத்தியக்கூறு - 4
இலங்கை பங்களாதேஷையும் இந்தியாவையும் வெல்லும் பட்சத்தில், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்றால், மீண்டும் நெட் ரன்ரேட் மூலம் இந்தியா அல்லது பங்களாதேஷ் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

47 comments:

Anonymous said...

Whoever wins in next match (Bangladesh-Srilanka) lets pray they win by a very low margin of less than 15 runs or 2 overs, this will help India a lot.
Today Dravid rightly said that we have to do well things that are in our control, rest we have to just wait and watch.
Thanks to India now all matches in the group are exciting, even the ones with Bermuda.
Now I say India has 40% chance of making it to super8 :)

RS said...

நல்ல அலசல்...இப்பத்தான் இது கொஞ்சம் புரியற மாதிரி இருக்குங்க.

-சுந்தர் ராம்ஸ்

மணிகண்டன் said...

//Whoever wins in next match (Bangladesh-Srilanka) lets pray they win by a very low margin of less than 15 runs or 2 overs, this will help India a lot.
Today Dravid rightly said that we have to do well things that are in our control, rest we have to just wait and watch.
Thanks to India now all matches in the group are exciting, even the ones with Bermuda.
Now I say India has 40% chance of making it to super8 :)

//

வாங்க அனானி, Let's hope India will do the rest at it's best :)

மணிகண்டன் said...

//நல்ல அலசல்...இப்பத்தான் இது கொஞ்சம் புரியற மாதிரி இருக்குங்க.
//

நன்றி சுந்தர் ராம்ஸ்!

மணிகண்டன் said...

Srinath's comment in rediff..

//Javagal Srinath, Rahul Dravid's statemate and friend (and ICC match referee for the World Cup) made the point recently: Rahul, he said, is not a bowler's captain. The field he set here is just one more indication why: two slips, the rest spread out in the predictable, textbook arc.

India has 413 on the board. By no stretch of the imagination could you see Bermuda even getting close. Put a slip more, a gully even, put a man under the batsman's eye at a very short cover - ring the batsman around, the bowlers automatically get charged, they bowl more attacking lines. If you won't do it when 'defending' 413 against a minor team, when will you, ever?

//
A good point. Dismissing Bermuda for less than 100 would have given India more chance in net runrate.

Anyhow everything depends on the match against Srilanka. India has to fire on all cylinders that day.

Unknown said...

ஓவ்வொரு இந்தியனின் ஆசையும் நம் நாடு அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்பதுவே. உங்கள் ஆய்வும் நம்பிக்கை அளிக்கின்றது. வெல்க இந்தியா.

ராஜா

மணிகண்டன் said...

//ஓவ்வொரு இந்தியனின் ஆசையும் நம் நாடு அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்பதுவே. உங்கள் ஆய்வும் நம்பிக்கை அளிக்கின்றது. வெல்க இந்தியா//

நம்பிக்கை நிச்சயமாக நிறைவேறும் இராஜகோபால்.

மணிகண்டன் said...

My team for the next match would be

Ganguly
Uthappa/Shewag (We need to gamble with a pinch hitter, as he may help by scoring a quick 30 or 40 )
Karthick
Dravid
Sachin
Yuvaraj
Dhoni
Pathan
M Patel
Kumble
Z Khan

Anonymous said...

//ஓவ்வொரு இந்தியனின் ஆசையும் நம் நாடு அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்பதுவே.//

இந்தியர்களைவிட உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் இந்தியாவின் வெற்றி மிக அவசியம்.

ஏற்கெனவே பாக்கிஸ்தான் வெளியேறியதில் ஏற்பாட்டாளர்கள் மிகவும் அப்செட்!!!

பணம், பணம், பணம். அது எதையும் செய்யும்.

மணிகண்டன் said...

////ஓவ்வொரு இந்தியனின் ஆசையும் நம் நாடு அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்பதுவே.//

இந்தியர்களைவிட உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் இந்தியாவின் வெற்றி மிக அவசியம்.

ஏற்கெனவே பாக்கிஸ்தான் வெளியேறியதில் ஏற்பாட்டாளர்கள் மிகவும் அப்செட்!!!

பணம், பணம், பணம். அது எதையும் செய்யும்.

//
No Comments :(

Arunkumar said...

thalaivare, highlights link kudunga pls ....

இலவசக்கொத்தனார் said...

//அதனால் அடுத்த போட்டிக்கு என்னோட சாய்ஸ் பதான்.//

இன்னைக்கு ஆட்டத்துக்கே அவரைக் கொண்டு வந்திருக்க வேண்டும். பெர்முடாவுடன் பந்து வீசி அவரும் பார்முக்கு வந்திருப்பார்.

அகார்கர் இன்னும் எப்படி அணியில் இருக்கிறார் என்பது புரியாத புதிர்.

திராவிட் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வியூகம் வகுக்க வேண்டும். சச்சினுக்கு இன்று மிகவும் முன்னரே பந்தைக் கொடுத்து இருக்க வேண்டும்.

Avanthika said...

thank you for the information...
let us hope and pray for the best

:-))))))...Happy

தென்றல் said...

நல்ல அலசல்! நன்றி, மணிகண்டன்!!

இப்பதைக்கு எதையும் விளையாட்டா கூட சொல்ல கூடாதுங்க... 'நம்ம மக்கா' serious ஆ எடுத்துகிறாங்க..!!

ICC விதிகள் எவ்வளவு கேலிகூத்தா இருக்குது கிறதுக்கு இது ஒரு நல்ல உதாரணம். (ஏப்ரல் 15: இந்தியா-பாக். போட்டிய சொல்றேங்க..)

ஆதிபகவன் said...

மணிகண்டன்,

இந்தியா/ஸ்ரீலங்கா மாட்ச் என்ன நடக்கும்ன்னு நினைக்கிறீங்க?

பர்முடாவே இன்னைக்கு 156 அடிச்சிருக்காங்க.

Anonymous said...

thank u navful iam using your comments in our daily malaimurasu.
it is very interestng
by kumar 9444056541

Naufal MQ said...

மணிகண்டன்,
இப்ப மகிழ்ச்சிதானே.

மணிகண்டன் said...

//thalaivare, highlights link kudunga pls .... //

அருண், முழுநீள வீடியோ எங்கேயும் கிடைக்கலை..உங்களுக்காக, இந்தியாவோடா விக்கெட்கள்,பவுண்டரிகள் மற்றும் ஸிக்ஸ்கள் அடங்கிய 3 நிமிட தொகுப்பு

http://youtube.com/watch?v=_yv5P8mZEqA

நன்றி யூட்யூப்

மணிகண்டன் said...

//இன்னைக்கு ஆட்டத்துக்கே அவரைக் கொண்டு வந்திருக்க வேண்டும். பெர்முடாவுடன் பந்து வீசி அவரும் பார்முக்கு வந்திருப்பார்.

அகார்கர் இன்னும் எப்படி அணியில் இருக்கிறார் என்பது புரியாத புதிர்.
//

அகர்கர் முனுமுனுக்கும் மந்திரம்
"சச்சினிருக்க பயமேன் " :)

மணிகண்டன் said...

//thank you for the information...
let us hope and pray for the best

:-))))))...Happy

//

என் சகோதரி சந்தோஷப்பட்டா எனக்கும் சந்தோஷம் தான் :)

மணிகண்டன் said...

//நல்ல அலசல்! நன்றி, மணிகண்டன்!!

இப்பதைக்கு எதையும் விளையாட்டா கூட சொல்ல கூடாதுங்க... 'நம்ம மக்கா' serious ஆ எடுத்துகிறாங்க..!!

ICC விதிகள் எவ்வளவு கேலிகூத்தா இருக்குது கிறதுக்கு இது ஒரு நல்ல உதாரணம். (ஏப்ரல் 15: இந்தியா-பாக். போட்டிய சொல்றேங்க..)

//
வாங்க தென்றல்..15ம் தேதி இந்தியா - அய்ர்லாந்தா, இல்லை பங்களாதெஷ் - அயர்லாந்தானு வெள்ளிக்கிழமை தெரியும்..

மணிகண்டன் said...

//மணிகண்டன்,

இந்தியா/ஸ்ரீலங்கா மாட்ச் என்ன நடக்கும்ன்னு நினைக்கிறீங்க?

பர்முடாவே இன்னைக்கு 156 அடிச்சிருக்காங்க.//

போன மேட்சுல 2 ரன்னுக்கு 5 விக்கெட் குடுத்த இந்தியா இன்னைக்கு 5 விக்கெட்டுக்கு 413 ரன் எடுத்திருக்காங்க. பெர்முடா சிறிய அணின்னாலும், இலங்கை எடுத்தத விட 92 ரன் அதிகம் தான ஆதிபகவன்.

ஒரு போட்டில ஒரு அணிகிட்ட ஆடறதை வச்சு இன்னொரு போட்டில என்ன நடக்கும்னு சொல்றது கஷ்டம்ங்க.இந்தியாவோட பவுலிங் வீக் தான்னாலும், மேற்கிந்தியத்தீவுகளை 85க்கு சுருட்டினாங்களே. ஆக இந்தியாவோட பவுலிங் மோசம்னாலும், கண்டிப்பா அடுத்த சுற்றுக்கு போகும்னு நினைக்கிறேன்

மணிகண்டன் said...

//thank u navful iam using your comments in our daily malaimurasu.
it is very interestng
by kumar 9444056541

//

Thanks Kumar :)

மணிகண்டன் said...

//மணிகண்டன்,
இப்ப மகிழ்ச்சிதானே.//

நண்பரே மிக்க மகிழ்ச்சி தான்.உங்களுக்கும் தான?

வெள்ளிக்கிழமை அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றா இன்னும் மகிழ்ச்சி :)

கார்த்திக் பிரபு said...

good alasal pa

அபி அப்பா said...

//வெள்ளிக்கிழமை அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றா இன்னும் மகிழ்ச்சி :)//

கவலை வேண்டாம்! நான் இருக்கிறேன்

முத்துகுமரன் said...

பர்முடாவின் ஆட்டம் ஒருவகையில் மகிழ்ச்சி. அவ்வளவு எளிதாக பங்களாதேசத்திடம் தோற்க மாட்டார்கள் என நம்பிக்கை வந்திருக்கிறது. ஆனால் நேற்று அநியாயத்துக்கு சிக்ஸ் பிராக்டிஸ் எடுத்தாட்டானுங்க நம்ம பயலுக. இலங்கை போட்டியின் டாஸ் போட்டியை முடிவை செய்யும். நாம் டாஸ் வென்றால் திரிசங்கு சொர்க்கம்தான். இந்த அதிரடி ஆட்டத்தில் யாரும் கங்குலியின் அருமையான பங்களிப்பை மறந்துவிட்டார்கள். வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்களை பொறூத்தவரை ஒருவராவது நங்கூரமிட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். :-)

MyFriend said...

வாழ்த்துக்கள் இந்தியா..

MyFriend said...

மீதி கிணறு தாண்ட என்ன செய்யனும்ன்னு நீட்டா எழ்ஹுதியிருக்கீங்க.. ஆனால், எனக்குதான் ஒன்னுமே புரியலை.. ஹிஹி.. :-)

கார்த்திக் பிரபு said...

yov sooper post ya

மணிகண்டன் said...

//good alasal pa
yov sooper post ya

//
மிக்க நன்றி கார்த்திக்!

மணிகண்டன் said...

////வெள்ளிக்கிழமை அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றா இன்னும் மகிழ்ச்சி :)//

கவலை வேண்டாம்! நான் இருக்கிறேன்

//

அதுதான் கவலையே :) பூனைய மடில கட்டிகிட்டு சகுனம் பார்க்கிற மாதிரி :)

மணிகண்டன் said...

//பர்முடாவின் ஆட்டம் ஒருவகையில் மகிழ்ச்சி. அவ்வளவு எளிதாக பங்களாதேசத்திடம் தோற்க மாட்டார்கள் என நம்பிக்கை வந்திருக்கிறது. ஆனால் நேற்று அநியாயத்துக்கு சிக்ஸ் பிராக்டிஸ் எடுத்தாட்டானுங்க நம்ம பயலுக. இலங்கை போட்டியின் டாஸ் போட்டியை முடிவை செய்யும். நாம் டாஸ் வென்றால் திரிசங்கு சொர்க்கம்தான். இந்த அதிரடி ஆட்டத்தில் யாரும் கங்குலியின் அருமையான பங்களிப்பை மறந்துவிட்டார்கள். வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்களை பொறூத்தவரை ஒருவராவது நங்கூரமிட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். :-)

//
ஆமாங்க முத்துக்குமரன். கங்கூலி ஒருபக்கம் நின்னு விக்கெட் விழாமா காப்பாத்துனாரு. போறபோக்கை பார்த்தால் 'The Wall'ங்கற திராவிட்டோட பட்டத்தை எடுட்துபாரோன்னு தோனுது. ஆனா என்னோட ஒரே வருத்தம், ஒரேயடியா டொக்கு போடாம சிங்கிள் எடுத்து அடுத்தவருக்கு ஸ்டரைக்க ரொட்டேட் பண்ணனும்கறது தான்.

மணிகண்டன் said...

//மீதி கிணறு தாண்ட என்ன செய்யனும்ன்னு நீட்டா எழ்ஹுதியிருக்கீங்க.. ஆனால், எனக்குதான் ஒன்னுமே புரியலை.. ஹிஹி.. :-)

//

வாங்க மைஃபிரண்ட், தொடர்ந்து எல்லா கிரிக்கெட் பதிவுகளையும் படிச்சிட்டு வாங்க. உங்களுக்கும் ஈடுபாடு வந்துடும் :)

மு.கார்த்திகேயன் said...

Nalla Alasal manikandan.. eppa paaththaalum eppadi kaththi mela nikkirathe india-vukku velaiyap pOchchu ponga..

All the best to indian team!

நாடோடி said...

இந்தியா முதலில் பேட் செய்து அதிக ரம் குவிக்க வேண்டும் அப்பொழுதுதான் நெட்ரன் ரேட் அதிகமா ஏறும். முதலில் பீல்டிங் செய்தால் அதோ கதிதான்.

மணிகண்டன் said...

//Nalla Alasal manikandan.. eppa paaththaalum eppadi kaththi mela nikkirathe india-vukku velaiyap pOchchu ponga..
//

அப்போ தானங்க பார்க்கறவங்களுக்கு ஒரு சுவாரசியம் வரும் தல :)
கடைசி வரைக்கும் காக்கவச்சு கடுப்படிக்கறது தான் நம்ம பசங்களுக்கு கைவந்த கலை ஆச்சே. ஆனா எப்படியும் அடுத்த சுற்றுக்கு போயிடுவாங்க.

மணிகண்டன் said...

//இந்தியா முதலில் பேட் செய்து அதிக ரம் குவிக்க வேண்டும் அப்பொழுதுதான் நெட்ரன் ரேட் அதிகமா ஏறும். முதலில் பீல்டிங் செய்தால் அதோ கதிதான்.

//

வாங்க நாடோடி,எனக்கென்னவோ பங்களாதேஷ் இலங்கையையும் தோற்கடிச்சு நெட் ரன்ரேட்டுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவாங்கன்னு தோனுது :)

Boston Bala said...

பெர்முடா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது அல்லவா ;)

மணிகண்டன் said...

//பெர்முடா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது அல்லவா ;)

//

கண்டிப்பா இருக்கு பாலா :). இலங்கை இந்தியாவையும் பங்களாதெஷையும் தோற்கடிச்சு, பெர்முடா பங்களாதெஷை தோற்கடிச்சா, ரன்ரேட் முறையில போக வாய்ப்பிருக்கு!!!

Arunkumar said...

thanks mani for the link. i had already youtubed :)

aprom, post pathi sollama poiten. nalla analysis. enakku ennavo bangladesh Srilanka-va win panniduvaanganu oru pachi solludhu :)

மணிகண்டன் said...

//thanks mani for the link. i had already youtubed :)

aprom, post pathi sollama poiten. nalla analysis. enakku ennavo bangladesh Srilanka-va win panniduvaanganu oru pachi solludhu :)

//
Thanks Arun. enakkum bangladesh win panni nama velaiya sulabama aakiduvaangannu thonuthu. runrate pathi kavalai padavenaame..srilankava win panna pothum.

A Simple Man said...

இல்லைங்க மணி,
ஒருவேளை பங்களாதேஷ்கிட்ட இலங்கை தோத்துட்டா நம்மகூட‌ வெறியோட விளையாடுவாங்க. ஏற்கனவே சமீபத்துல நம்மகிட்ட தோத்த கடுப்புல வேற இருக்காங்க..

வேணும்னா பெர்முடா பங்களாதேஷை தோற்கடிக்கட்டும்னு வேண்டிக்குவோம் :))

மணிகண்டன் said...

//இல்லைங்க மணி,
ஒருவேளை பங்களாதேஷ்கிட்ட இலங்கை தோத்துட்டா நம்மகூட‌ வெறியோட விளையாடுவாங்க. ஏற்கனவே சமீபத்துல நம்மகிட்ட தோத்த கடுப்புல வேற இருக்காங்க..

வேணும்னா பெர்முடா பங்களாதேஷை தோற்கடிக்கட்டும்னு வேண்டிக்குவோம் :))

//
அபுல்,
அடுத்த சுற்றுக்கு போகலைன்னா இந்தியாவுக்கு திரும்புறப்போ என்ன நடக்கும்னு நம்ம வீரர்களுக்கு தெரியும். நான் இதை என்னோடா கண்ணோட்டத்துல சொல்லலை.பொதுவா நம்ம நாட்டு ரசிகர்களை பத்தி சொல்றேன். இலங்கையோட தோல்வி வெறி இந்தியவோட இந்த வெறிகிட்ட ஒன்னும் பலிக்காது. வெள்ளிக்கிழமை பாருங்க :)

A Simple Man said...

ம்.. கண்டிப்பா நல்ல ர‌ன்ரேட்டோட‌ வெள்ளிக்கிழமை ஜெயிப்பாங்க..
உலகக் கோப்பை நமக்குத்தாங்க..

நாடோடி said...

//எனக்கென்னவோ பங்களாதேஷ் இலங்கையையும் தோற்கடிச்சு நெட் ரன்ரேட்டுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவாங்கன்னு தோனுது :)//

நப்பாசைக்கு அளவே இல்லையா. பாருங்க நம்ம டீம் நம்மல எப்படிலாம் ஆசைபட வைக்குறாங்க.

:))))))))))))))))))))))))))))))

மணிகண்டன் said...

////எனக்கென்னவோ பங்களாதேஷ் இலங்கையையும் தோற்கடிச்சு நெட் ரன்ரேட்டுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவாங்கன்னு தோனுது :)//

நப்பாசைக்கு அளவே இல்லையா. பாருங்க நம்ம டீம் நம்மல எப்படிலாம் ஆசைபட வைக்குறாங்க.
//
எப்படியும் இந்தியா அடுத்த சுற்றுக்கு போகபோகுது..எப்படி போனா என்ன நாடோடி ?