நாள் : ஏப்ரல் 3 , 2023
27 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு முற்படுத்தப்பட்டவர்கள் போராட்டம்.
இன்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்
இது ஒரு கண்துடைப்பு பட்ஜெட் - அதிமுகவின் தலைவர் டி.டி.வி தினகரன் பேட்டி
2026ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் - காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.
சினிமாவில் இரத்தத்தை காண்பிக்கக்கூடாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவு
இந்திய வேலைகளை அமெரிக்காவுக்கு அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்து இந்திய கனினிப் பொறியாளர்கள் கட்சி போராட்டம்.
தனுஷ்-ஐஸ்வர்யா மகனும், ஜோதிகா-சூர்யா மகளும் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்.
தண்ணீரின் விலை இன்று 24 ரூபாய் உயர்ந்து லிட்டருக்கு 865 ரூபாயாக இருந்தது.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையிலிருந்து இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.
பெர்முடாவுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியாக, அந்நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷேவாக் நியமனம்.
எல்லாம் ஒரு கற்பனைதாங்க :) யாருக்கு தெரியும் எதாவது நடந்தாலும் நடக்கலாம்.
டிஸ்கி : எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தாங்க. எதாவது முத்திரை குத்திடாதீங்க :)
Monday, April 2, 2007
நாளைய தலைப்புச் செய்திகள்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 3:19 PM 19 comments
Labels: செய்திகள், நகைச்சுவை?
Tuesday, March 6, 2007
நியூசிலாந்து பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி
'சற்றுமுன்'இல் வெளியான இப்பதிவு தமிழ்மணத்தில் தெரியாததால் மீண்டும் எனது பதிவில்..
இன்றைய பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி, நியூஸிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகக்கோப்பை, இம்முறை பயிற்சி ஆட்டங்களிலேயெ ஆச்சரியங்களை தர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகக்கோப்பையை வெல்லும் என் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான நியூஸிலாந்து தோற்றிருப்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியே!
மேலதிக விவரங்களுக்கு
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 3:03 PM 10 comments
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள், நியூசிலாந்து
இந்தியா 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இன்று நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸில் ஜெயித்த நெதர்லாந்ந்து இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஷேவாக்கும் கங்கூலியும் தொடக்க ஆட்டக்கரார்களாக களமிறங்கினர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 300 ரன்கள் அடித்தது. கேப்டன் திராவிட் 92 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக சச்சின் 59 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்தபடியாக 33 உதிரிகளே ! வேறு யாரும் 30 ரன்களை தாண்டவில்லை.
ஸ்ரீசாந்தும், முனாஃப் படேலும் பேட்டிங் செய்யவில்லை எனினும் பயிற்சி போட்டிகளின் சிறப்பு விதிகளின்படி பந்து வீச அனுமதிக்கப்பட்டனர்.118 ரன்களில் நெதர்லாந்து அணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 182 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சுலபமாக வென்றது. யுவராஜ் சிங் 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முழு ஸ்கோர் விவரம்
மார்ச் 8ம் தேதி அடுத்த பயிற்சி போட்டியில் இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மோதுகிறது.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 1:46 PM 7 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள்
Monday, March 5, 2007
உருவத்தை பார்த்து பயந்திடாதீங்கப்பு!!

இவர் பெர்முடா அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் Dwane Leverock. 35 வயதான இவரின் எடை 250 பவுண்ட்கள். இவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடதக்கது!
கென்யாவுக்கு எதிரான ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், இன்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 10 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உருவத்தை பார்த்து பயந்திடாதீங்க பசங்களா, நல்லா வெளுத்து வாங்குங்க!!
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 1:01 PM 21 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, செய்திகள், நகைச்சுவை
Breaking News in Rediff
Breaking News என்று ரீடிஃபில் இன்று வெளியாகியுள்ள செய்தி
ஏப்ரல் 15 இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இதை பற்றி போன மாதம் 20ம் தேதி வெளியான எனது பதிவு
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 9:19 AM 0 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, செய்திகள்
Wednesday, February 28, 2007
விரலை வெட்டிக்கொள்ள தயார்!!!

நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான் ஜேகப் ஓரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகையில் காயமடைந்தார். இதனால் உலகக்கோப்பையில் இவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கையுறைக்குள் அணியும் வகையில் காயத்தை ஆற்றும் பட்டைகள் உள்ளன. ஆகவே என்னால் நன்றாக விளையாடமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது. வேறெந்த வழியும் இல்லாத பட்சத்தில் என் விரலை வெட்டிக்கொள்வது பலனளிக்கும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கேட்ச் பிடிக்கும் பொழுது இவரின்ன் இடதுகை மோதிர விரல் காயமடைந்த காட்சி..
28 வயதான் இவர் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 1382 ரன்கள் அடித்துள்ளார் மற்றும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மருத்துவர்கள் இவர் முழுமையாக குணமடைய குறைந்தது நான்கு வாரங்களாவது ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.நியூசிலாந்து தனது முதல் போட்டியில் மார்ச் 16ம் தேதி இங்கிலாந்துடன் மோதுகிறது.
விரலை வெட்டிக்கொண்டு விளையாடுவது சுலபமான காரியமில்லை எனினும் இவரது மன உறுதியையும் நம்பிக்கையையும் பாராட்டுவோம்.
உலகக்கோப்பை பரிசுப்போட்டி விவரங்கள் இங்கே
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 6:57 PM 13 comments
Labels: ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள், நியூசிலாந்து
Monday, February 26, 2007
பாகிஸ்தான் அணியினருக்கு ஊக்கப்பரிசுகள் அறிவிப்பு

உலகக்கோப்பையில் பங்கேற்கவிருக்கும் பாகிஸ்தான் அணியினருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊக்கப்பரிசுகளை அறிவித்துள்ளது.பாகிஸ்தான் கோப்பையை வென்றால் அணியிலுள்ள 15 வீரர்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும்.
அணியில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்தவே இந்நடவடிக்கை.மேலும் பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றால் ஒவ்வொரு வீரருக்கும் 20,000 டாலர்களும், அரையிறுதியில் வெற்றி பெற்றால் 25 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சலீம் அட்லஃப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான அக்தர் மூட்டு வலி காரணமாக் தான் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இது போன்ற பரிசுத்தொகை எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.
நீங்களும் பரிசு பெற இங்கே ஒரு வாய்ப்பு..
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:09 AM 5 comments
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள், பாகிஸ்தான்
Friday, February 23, 2007
உலகக்கோப்பை அணியில் பதான் இடம்பெறுவாரா?

வரும் 28ம் தேதி உலகக்கோப்பையில் பங்குபெற மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் இர்ஃபான் பதான் இடம்பெறுவாரா என்பது வரும் ஞாயிறன்று தெரியும். உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் பதான் இடம்பெற்றிருந்தாலும், ஞாயிறன்று தியோதர் கோப்பையில் அவர் விளையாடுவதைப் பொறுத்தே அவர் அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கார் நேற்று மும்பையில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவகளுடனான ஒருநாள் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடிய பதான், பின் தோள்பட்டை வலி காரணமாக தானாக முன்வந்து விலகினார். இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டித்தொடரிலும் விளையாடவில்லை. சில நாட்களுக்கு முன் தன் வலி சரியாகிவிட்டதாகவும், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் பதான் தெரிவித்தார்.
வரும் ஞாயிறன்று அகமதாபத்தில் நடைபெற இருக்கும் தியோதர் கோப்பைக்கான போட்டியில் அவரின் உடல்தகுதி கண்கானிக்கப்படும் என்றும், திருப்திகரமாக் இருந்தால் மட்டுமே அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்றும் வெங்சர்கார் தெரிவித்தார். ஒருவேளை பதான் தகுதிபெறத் தவறினால், தேர்வுக்குழுவும், அணியின் கேப்டன் திராவிட்டும், பயிற்சியாளர் சாப்பலும் மாற்று ஆட்டக்காரரை தேர்வு செய்வார்கள்.
பதான் முழு உடல்தகுதி பெற்று உலகக்கோப்பையில் சாதனைகள் புரிவார் என நம்புவோம்!!
உலகக்கோப்பைக்கான பரிசுப் போட்டியில் பங்குபெற இங்கே க்ளிக்கவும்
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:58 PM 2 comments
Labels: இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள்
Monday, February 12, 2007
ஆஸ்திரேலியாவின் பூமராங்

நமக்கு சாதா ஆப்புன்னா, ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பெஷல் மசாலா ஆப்பு கிடைச்சிருக்கு. ரெண்டு இறுதிப் போட்டிலயும் தோத்து இங்கிலந்து கிட்ட கோப்பையை தூக்கி குடுத்திருக்கு. கிரிக்கெட்னா வெற்றி தோல்வி சகஜம் தான். இது ஒன்னும் பெரிய விஷயமில்லைங்கறவங்க போன வாரம் ஆஸ்திரேலிய அணியோட பயிற்சியாளர் சொன்னதை படிங்க..
"உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா ஆடும் இத்தொடர் அணியின் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிரணியினர் நாங்கள் எதிர்பார்த்தபடி எங்களுக்கு ஈடு கொடுத்து ஆடவில்லை. எதிரணியினரின் பலவீனமான பேட்டிங்கினால் எங்கள் பந்து வீச்சாளர்கள், தங்களது யார்க்கர்,பவுன்சர் போன்ற திறமைகளை சோதித்துப் பார்க்க முடியவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்களின் திறமையை வளர்க்கும் விதம் அவர்கள் விளையாடவில்லை. அதே காரணத்தால் எங்கள் அணியினரின் ஃபீல்டிங் திறமையையும் சோதிக்க முடியவில்லை".
கடைசி ரெண்டு இறுதிப்போட்டிலயும் அடி வாங்கினிங்களே, அப்ப எல்லாத்தையும் சோதிச்சு பார்த்திருக்கலாமேங்க?? மறந்துட்டிங்களோ?
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா??
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 7:31 PM 1 Comment
Labels: செய்திகள்
Friday, February 9, 2007
உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் ஜொலிப்பார் - பிரையன் லாரா
மேற்கிந்தியத்தீவுகளின் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான லாரா இவ்வாறு கூறியுள்ளார்.சச்சினைக் கண்டு நான் வியக்கிறேன்.இந்திய கிரிக்கெட்டுக்கு அவரின் பங்கு மகத்தானது.சச்சினின் சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் மீண்டும் அனைவரும் கானப்போகிறார்கள்.சச்சின் மோசமாக விளையாடுவதாக் நான் கருதவில்லை.அவரை விட அதிகமாக கடினமான நேரங்களை நான் கடந்து வந்துள்ளேன்.இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஆட்டக்காரராக் அவர் விளங்குவார் என லாரா தெரிவித்துள்ளார்.
அவர் சொன்னது நடந்தா நல்லாதானிருக்கும்..
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:51 PM 0 comments
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக Mike Hussey நியமனம். நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சாப்பல்--ஹேட்லி கோப்பைக்கான மூன்று ஒருநாள் போட்டிகளில் ஹஸ்ஸே கேப்டனாக இருப்பார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி கூறிய தேர்வுக்குழுவின் தலைவர், காயம் காரணமாக ரிக்கி பான்ட்டிங் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமன்றி மேற்கிந்தியத்தீவுகளில் ந்டைபெற உள்ள உலகக்கோப்பைக்கு முன் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அணியின் தற்போதைய துணை கேப்டனான கில்கிறிஸ்டுக்கும் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நியூஸிலாந்து செல்லும் அணியின் கேப்டனாக் ஹஸ்ஸேவும் துணை கேப்டனாக மைக்கேல் க்ளர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் ரிக்கி பான்ட்டிங் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்வார்.
**************************
காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் ஹெய்டன் 82 ரன்களும் பான்ட்டிங் 75 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது.காலிங்வுட் 120 ரன்களும் பெல் 65 ரன்களும் எடுத்தனர்.மொத்தம் மூன்று இறுதிப்போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இது. அடுத்த இறுதிப்போட்டி வரும் ஞாயிறன்று ஸிட்னியில் நடைபெறும்.
**************************
பாகிஸ்தான் தென்னாப்பிரிக்க அணியிடையே மூன்றாவது ஒரு நாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்துள்ளது.முகமது யூஸுஃப் 79 ரன்கள் எடுத்துள்ளார்.தென்னாப்பிரிக்கா இன்னும் பேட் செய்யவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியினரும் ஒரு முறை வென்றுள்ளனர்.
**************************
உலகக்கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் கய்ஃப் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் அஜித் வடேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.சமீபத்திய போட்டிகளில் அவர் நன்றாகவே விளையாடியுள்ளார்.வாய்ப்புகள் கிடைத்தபொழுது தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஆகவே அவரை அணியில் சேர்ப்பதை பரீசிலிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேற்கிந்தியத்தீவுகளில் இந்தியா விளையாடிய பொழுது 5 போட்டிகளில் 3 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:46 AM 4 comments
Labels: செய்திகள்
Thursday, February 8, 2007
கங்காருவுக்கு மணி கட்டப்போவது யார் ?

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்ட்டிங் அளித்துள்ள பேட்டியின் விபரம்..
ஆஸ்திரேலிய அணிக்கு சரிசமமான போட்டியாளர்கள் இல்லாதது போல் தெரிகிறதே?
நான் அவ்வாறு நினைக்கவில்லை.நாங்கள் வங்காளதேசத்திடம் கூட ஒருமுறை தோற்றுள்ளோம். கிரிக்கெட் என்பது எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு. ஆனால் எனது அணி தன் முழுபலத்துடன் விளையாடுகையில் எங்களை வெல்வதற்கு சிறப்பான முயற்சி செய்யவேண்டும். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தனக்கான பணி என்ன என்பதை அறிந்து அதை தேவையான தருணத்தில் செய்கிறார்கள். 1999 மற்றும் 2003 இருமுறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்றுள்ளோம்.இம்முறையும் அதை தக்க வைத்துக்கொள்ள முயல்வோம்.
சிறப்பான முயற்சி என்றால்?
உதாரணமாக சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணி நாங்கள் அடித்த 434 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியது போல.அது ஒரு அசாதாரணமான் வெற்றி. நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழப்பதில்லை. ஆகவே எதிரணியினர் 100 சதவிகித ஈடுபாட்டுடன் முயற்சிக்க வேண்டியுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள வேகம் குறைவான ஆடுகளங்கள் எதிரணியினருக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறீர்களா?
அனைத்து விதமான ஆடுகளங்களிலும் நாங்கள் வென்றுள்ளோம். அதுதான் எங்கள் அணியின் சிறப்பு. கடந்த ஐ.சி.சி. சேம்பியன்ஸ் கோப்பை இந்தியாவில் ந்டைபெற்ற பொழுது,அனைத்து ஆடுகளங்களும் மிகவும் கடினமாகவே இருந்தன. ஆனாலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்திய துணைகண்டம்,இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் என அனைத்து இடங்களிலும் வென்றுள்ளோம். இதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.
ஆஸ்திரேலிய அணிக்கு வயதாகி வருவதாக எழுந்துள்ள விமர்சனம் பற்றி?
நானும் இதை கேள்விப்பட்டேன். நன்றாக விளையாடுவதுதான் முக்கியம். 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளி வீழ்த்துபவருக்கு, 40 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.
'Defending Champions' என்ற நிலை அணியினரிடையே மனஅழுத்தத்தை உருவாக்கியுள்ளதா?
அழுத்தம் என்பது எப்பொழுதும் இருக்கும் ஒன்று. அதை எவ்வாறு கையாள்கிறோம் என்பதே முக்கியம். சிலருக்கு அதுவே எதிராக அமையலாம், சிலருக்கு அதுவே ஊக்குவிக்கும் அம்சமாக இருக்கலாம்.
Mike Hussey பற்றி ?
சமீப காலமாக வெகு சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். மேற்கிந்தியத்தீவுகளிலும் இதேபோல் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 4:37 PM 3 comments
Labels: செய்திகள்
இன்றைய கிரிக்கெட் செய்திகள்

பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே ஞாயிறன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியின் பொழுது, ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்புகையில் தன்னை கேலி செய்த ரசிகரை மட்டையை காட்டி மிரட்டியதாக அஃப்ரிடியின் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.சி.சி.யின் கிறிஸ் போர்ட் இதைப்பற்றி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் அஃப்ரிடிக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 4 முதல் 8 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்படும்.
***************************
இந்தியா - இலங்கை இடையேயான கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடையிலேயே கைவிடப்பட்டது. டாசில் ஜெயித்த இந்தியா, இலங்கையை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஜெயசூர்யா 63 ரன்களும் அட்டபட்டு 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியாவின் முனாஃப் படேல் 2 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவ்விரு அணிகளிடையேயான இரண்டாவது போட்டி வரும் 11ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
***************************
கிரிக்கெட் புக்கி கொச்சாருடன், சாமுவேல்ஸ் தொலைபேசியில் உரையாடிய சம்பவம் குறித்த விசாரனையை பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி தொடங்கியுள்ளது. இது Match Fixing போல் தெரியவில்லையென்றாலும், தனது அணியின் தகவல்களை வெளியே சொல்லியது ஐ.சி.சி. யின் விதிகளை மீறியாதாகும். இதுபற்றிய விசாரனை அறிக்கை மேற்கிந்தியதீவுகளின் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்படும், சாமுவேல்சின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் ஐ.சி.சி. யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தொலைபேசி உரையாடலில் ராபின் சிங் என்பவரின் பெயரும் உள்ளது. இது இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் சிங்கா என்பது தெரியவில்லை. ராபின்சிங் மேற்கிந்தியத்தீவுகளில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரையாடலில் உள்ளது அவர்தானா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், இவ்விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று மஹாராஷ்டிர மாநில டி.ஜி.பி. பஸ்ரிச்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனது மகன் சாமுவேல்சும், கொச்சாரும் ஆறு வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாக உள்ளனர்.இதுபோன்ற விஷயங்களில் நிச்சயமாக எனது மகன் ஈடுபட மாட்டான் என்று சாமுவேல்சின் தாயார் லுனன் சொல்லியிருக்கிறார்.
***************************
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் பேங்க் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் நாளை மோதுகின்றன.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 11:39 AM 3 comments
Labels: செய்திகள்
Wednesday, February 7, 2007
மீண்டும் Match Fixing ???

இந்தியாவிற்கும் மேற்கிந்தியத்தீவுகளுக்கும் கடந்த மாதம் 21ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் Match Fixing (சரியான தமிழ் பதம் என்னங்க?) நடந்திருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளின் மார்லோன் சாமுவேல்ஸ், அன்றைய போட்டியில் விளையாடப் போகும் தனது அணி பற்றிய ரகசிய தகவல்களை முன்கூட்டியே முகேஷ் கோச்சார் என்ற புக்கியிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.இதுபற்றிய புகாரை நாக்பூர் காவல்துறையினர் பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி.க்கு அனுப்பியுள்ளனர்.
இதைபற்றி பேட்டியளித்த நாக்பூர் உதவி ஆணையாளர் அமிதேஷ் குமார், சாமுவேல்சுக்கும் கோச்சாருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.பலமுறை இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், மேற்கிந்தியத்தீவுகளின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.இதில் பணப்பரிமாற்றம் ஏதும் நடந்ததா எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
பி.சி.சி.ஐ செயலாளர் நிரஞ்சன் ஷா 'நாக்பூர் காவல்துறையினரின் அறிக்கை இன்னும் எங்களிடம் வரவில்லை.அது கிடைத்ததும் அதைப்பற்றிய அறிக்கையை ஐ.சி.சி.க்கு அனுப்புவோம்' என தெரிவித்தார்.
இப்போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:25 AM 7 comments
Labels: செய்திகள்
Tuesday, February 6, 2007
ஷேவாக் மீது புகார்
ஷேவாக் சர்ச்சை
நடக்கவிருக்கும் இலங்கையுடனான ஒரு நாள் போட்டித்தொடரில் ஷேவாக் இடம்பிடித்திருக்கும் நிலையில் அவர் மீதான புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய இந்திய அணியின் மேனேஜரான சேத்தன் தேசாய், பி.சி.சி.ஐ.க்கு சமர்பித்துள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் ஷேவாகின் ஒழுங்கீனம் மற்றும் நடத்தை பற்றிய புகாரை எழுப்பியுள்ளார். இதற்கு உதாரணமாக டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.
அன்று பேட்டிங் செய்யவிருந்த ஷேவாக் தனக்கு மேலும் சிறிது பேட்டிங் பயிற்சி தேவைப்படுகிறது என்றும் அதற்காக மைதானத்திற்கு காலை 6.30 மணிக்கு வருமாறும் அணியின் பயிற்சியாளர் சாப்பலிடம் தெரிவித்தார். அதன்படி காலை 6.30 மணிக்கு சாப்பலும் அவரின் உதவியாளர் ஃப்ரேசரும் வந்து காத்திருந்தனர். ஆனால் ஷேவாக் வரவில்லை.இதைப்ப்ற்றி கேட்டபொழுது தான் பயிற்சி செய்யும் மனநிலையில் இல்லையென்றும் அதனால் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது மிகவும் கண்டனத்துகுரிய செயலாகும். பி.சி.சி.ஐ.யிடம் சமர்ப்பித்துள்ள எனது அறிக்கையில் இதைப்பற்றி தெரிவித்துள்ளேன் என்றும் தேசாய் கூறியுள்ளார்.
இது தவிர வேறு ஏதும் புகாராக் தெரிவிக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.
ஷேவாக் மீது ஒழுங்கீன நடவடிக்கை பாயுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
***********************
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 4 ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 8ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா வரும் இந்திய அணியின் பயிற்ச்சியாளர் க்ரெக் சாப்பலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை ஆணையர் முகர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் புவனேஷ்வர் விமானநிலையத்தில் சாப்பலின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
************************
காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதி தகுதிச் சுற்றுப் போட்டியில் இங்கிலந்து அணி நியூசிலாந்தை 14 ரன்கள் வித்தியாசத்தி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.இவ்வணியின் காலிங்வுட் 106 ரன்கள் அடித்தார். நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் ஃபெளிமிஃங் 106 ரன்கள் குவித்தார். இத்தொடரின் முதல் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
**************************
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஒரு நாள் போட்டித்தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் ராவ் இஃப்திகார் பயணம்.சமீபத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 164 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் காயமடைந்த(?) பாகிஸ்தான் வீரர்களான் அக்தர்,உமர் குல்,ஷப்பிர் அஹமத் தாயகம் திரும்பியதால்,இஃப்திகார் அங்கு சென்றுள்ளார்.
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 3:06 PM 8 comments
Labels: செய்திகள்
