இன்று ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
டாஸில் ஜெயித்த ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு
334 ரன்கள் குவித்தது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). பாண்டிங் 23 ரன்கள் அடித்திருந்த பொழுது ஸ்காட்லாந்து அணியினர் அவர் கொடுத்த கேட்சை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது! அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.
அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 40.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி ஆட்டக்காரரான ப்ளைன் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் வீடியோ (Highlights Runtime 30 Mins)
உலகக்கோப்பை பரிசுப்போட்டிகு நீங்கள் கூறிய பதில்களை சரி பார்க்க இங்கே செல்லவும்.
Wednesday, March 14, 2007
ஆஸ்திரேலியா Vs ஸ்காட்லாந்து வீடியோ
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:41 PM 14 comments
Labels: ஆஸ்திரேலியா, நினைவுகள், வீடியோ
Thursday, March 8, 2007
மறக்க முடியுமா - 3
சச்சினின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கோகோ கோலா கோப்பைக்காக 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டி ஆகும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பங்கேற்ற இத்தொடரில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. தோல்வியுற்றாலும் மிகக்குறைந்த வித்தியாசத்தில் தோற்றால், சிறந்த ரன்ரேட் விகிதப்படி இறுதிப்போட்டிக்கு நுழையமுடியும்(இது தான் எப்பவும் நடக்கறதாச்சே :-D ) என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியனர் தொடக்கம் முதலே அடித்து விளையாடி 50 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தனர். மார்க் வாஹ் 81 ரன்களும் பெவன் 101 ரன்களும் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடித்து ஆடிய போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுதும், சச்சின் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியினரை துவம்சம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராமல் வீசிய மனற்புயலால் ஆட்டம் தடைப்பட்டது.
பின்பு ஆட்டம் துவங்கியபொழுது இந்தியாவிற்கு 46 ஓவர்களில் 276 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 237 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் பின் சச்சின் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலியாவை மிரள வைத்தது. பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பந்து நாலாதிசையிலும் பறந்தது. சச்சின் 143 ரன்கள் எடுத்து (131 பந்துகள்,ஒன்பது 4,ஐந்து 6), தனியொருவராக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உதவினார்.அன்று சச்சின் ஆடிய ஆட்டம் 'DesertStorm' என அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது ரசிகர்களால் மறக்க முடியாத ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
அந்த ஆட்டத்தை பார்த்து ரசிக்க..
இதுபோன்ற சிறந்த ஒரு ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் சச்சின் மீண்டும் தருவார் என்று நம்புவோம்!!
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 9:55 AM 22 comments
Labels: கிரிக்கெட், நினைவுகள்
Thursday, February 8, 2007
மறக்க முடியுமா - 2

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இந்தியா ஜெயிச்ச ஒரே உலகக்கோப்பை.இதுக்கு முன்னால நடந்த 2 உலகக்கோப்பையிலும் சேர்த்து இந்தியா ஒரே ஒரு போட்டியில தான் ஜெயிச்சிருந்துச்சு (1975ல கிழக்கு ஆப்பிரிக்கா அணியோட).
அதனால 1983ல நடந்த உலகக்கோப்பையில அவ்வளவா எதிர்பார்ப்பு இல்லாத ஒரு அணியாதான் நுழைஞ்சுது.ஆனா யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விளையாடி, இறுதி வரைக்கும் வந்துது. இறுதிப் போட்டியில அப்போதைய ஜாம்பவானான மேற்கிந்தியத்தீவுகளை
140 ரன்னுக்கு சுருட்டி 43 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சு கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில்தேவ் கோப்பையை வாங்கும் காட்சி..
இந்தியா மறுபடியும் ஜெயிக்க ஒரு + போட்டுட்டு போங்க..புண்ணியாமா போவும்.
நினைவுகள் தொடரும்..
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 8:57 PM 4 comments
Labels: கிரிக்கெட், நினைவுகள்
Sunday, February 4, 2007
மறக்க முடியுமா - 1
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் எவ்வளவோ இருக்கும். சேரன் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடறதுக்கு ஒவ்வொருத்தரும் ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க. அதே மாதிரி தாங்க இந்தியாவோட கிரிக்கெட் வரலாற்றிலயும் அந்த மாதிரி ஒரு பெரிய பட்டியலே இருக்கு. அதை தொகுத்து வழங்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த பதிவு.
1996 மார்ச் 9ம் தேதி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெங்களூரில் நடந்த உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பொதுவா இந்தியா பாகிஸ்தான் ஆடுதுன்னாலே தவழ்ற குழந்தையில இருந்து தள்ளாடுற பெரிசு வரைக்கும் ஒரு வெறி வந்துடும். ஏதோ மறியல் நடக்குற மாதிரி ரோடெல்லாம் வெறிச்சோடி போயிருக்கும். இவ்வளவு முக்கியமான போட்டி,அதுவும் பெங்களூரில நடக்குதுன்னா சும்மாவா?அன்னைக்கும் அப்படித்தான்.
முதல்ல ஆடின இந்திய அணி பாகிஸ்தானை கிழிச்சு காயப்போட்டிடுச்சு(50 ஒவர்ல 287 ரன்). அடுத்து பாகிஸ்தான் ஆட வந்ததும், சயீத் அன்வரும்,அமீர் சோஹைலும் பொளந்து கட்றாங்க. அவ்ளோதாண்டா இந்தியான்னு எல்லாரும் நெனைக்க ஆரம்பிச்சாங்க. 15வது ஒவரை நம்ம பிரசாத் வீசுனாரு. அந்த ஒவரோட 5வது பந்துல சோஹைல் ஒரு 4 அடிச்சுட்டு,பிரசாத்தைப் பார்த்து நக்கலா பேசுவாரு. அடுத்த பந்துல நம்ம பிரசாத் குடுப்பாரு பாருங்க ஒரு ஆப்பு.அடாடா..மறக்க முடியாத நினைவு.அதுக்கப்புறம் இந்தியா அந்த மேட்சை 39 ரன் வித்தியாசத்தில ஜெயிச்சுது.இந்திய ரசிகர்கள் மட்டுமில்லை பாகிஸ்தான் ஆளுங்களாலயும் மறக்க முடியாத ஆட்டத்துல அதுவும் ஒன்னு.
அந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்க..
நினைவுகள் தொடரும்..
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:46 PM 3 comments
Labels: கிரிக்கெட், நினைவுகள்
