Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Wednesday, March 14, 2007

நீங்கள் சொன்னவை ! ! !


உலகக்கோப்பை பரிசுப் போட்டியோட கடைசி நாள் மார்ச் 12ம் தேதியோட முடிஞ்சிடுச்சு. இதுவரைக்கும் 22 பேர் பதில் சொல்லி இருக்கீங்க. நீங்க சொன்ன பதிலை எல்லாம் தொகுது ஒரு Spreadsheet-ஆ போட்டிருக்கேன். பதில் சொன்ன எல்லாரும் உங்க பதில்களை சரி பார்த்துக்கோங்க. எதாவது பதில் தப்பா இருந்தா இல்லை உங்க பதில்களே இல்லைன்னா, பின்னூட்டத்தில சொல்லுங்க. முன்னால நீங்க போட்ட பதில்களின் பின்னூட்டத்தோட சரிபார்த்து திருத்திடறேன்.

ஏப்ரல் 28 இல்லை 29 வெற்றி பெற்றவர் யாருன்னு தெரியும்.





பதில் சொன்ன 22 பேருல இந்தியா கோப்பையை ஜெயிக்கும்னு சொல்லியிருக்கறவங்க 14!
ஆஸ்திரேலியா 4, பாக்கிஸ்தான்,இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தலா 1.

இந்தியா சம்பந்தப்பட்ட 3 கேள்விகள் (கேள்வி 5,6,7) தவிர மீதி எல்லா கேள்விகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களின் பேரை சொல்லியிருக்கார் தீவிர ஆஸ்திரேலிய ரசிகரான மோகன்தாஸ்!

எந்த கீப்பர் அதிக கேட்ச் பிடிப்பாருங்கற 10வது கேள்விக்கு 15 பேர் கில்கிறிஸ்ட்னு சொல்லியிருக்காங்க. நம்ம தோனிக்கு கிடைச்ச ஓட்டு 4 தான் :(

எந்த மட்டையாளர் இந்த உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடிப்பார் என்ற 9வது கேள்விக்கு ரிக்கி பாண்டிங்னு பதில் சொன்னவங்க மு.கார்த்திகேயனும், ஜி-zயும். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கலாம். இன்னைக்கு நடந்த ஒரு போட்டியிலேயே பாண்டிங் 5 ஸிக்ஸ் அடிச்சிட்டாரு!

பார்கலாம் யாரு ஜெயிக்கறாங்கன்னு!!

உங்கள் பதில்கள்

Sunday, March 11, 2007

இந்தியா Vs மேற்கிந்தியத்தீவுகள் போட்டியின் வீடியோ ! !

நேத்து நடந்த பயிற்சி போட்டில இந்தியா மேற்கிந்தியத்தீவுகளை 85 ரன்னுக்கு சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிச்சது எல்லாருக்கும் தெரியும். அந்த மேட்சை பார்க்கும் வாய்ப்பை இழந்தவங்களுக்காக வீடியோ தொகுப்பு இங்கே..

பார்த்து ரசியுங்கள்...








வெற்றிகள் தொடரட்டும்!!!



நீங்களும் 100 டாலர் பரிசு பெற இங்கே வாங்க..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு பதில் சொல்ல!

Tuesday, February 27, 2007

அசத்தப் போவது யாரு ???


போன வாரம் கேட்டிருந்த கேள்விகளுக்கு இதுவரைக்கும் 7 பேர் பதில் சொல்லியிருக்காங்க. 4 பேரு பதுங்கி(??) இருக்காங்க.

30 பின்னூட்டங்களுக்கு மேல உள்ள பதிவுகள் இனிமே அண்மையில் மறுமொழியப்பட்ட இடுக்கைகள் பகுதில வராதுங்கறதால இந்த பதிவு.

இதுவரை வந்துள்ள பதில்கள் கீழே...


Blogger Name12345678910ஸ்கோர்

சரியான விடைகள்

பாஸ்டன் பாலாPakistanPakistan, South Africa, West Indies, AustraliaMohammad YousufChaminda Vaasசூப்பர் 8SehwagKumblePakistanTendulkarGilchrist

மணிகண்டன்South AfricaIndia,South Africa,Australia,West IndiesSachin TendulkarMuralidharanSemi-FinalSachin TendulkarZaheer KhanAustraliaSourav GangulyAdam Gilchrist

Fast BowlerSouth AfricaSouth Africa, Newzeland, Australia & IndiaRicky PontingShane BondSemi FinalGangulyZaheer KhanAustraliaGilchristBoucher

அபுல்IndiaIndia,South Afica,Australia,Sri LankaSachin TendulkarShaun PollockFinalSachin TendulkarZaheer KhanSouth AficaJeyasuryaMark Boucher

மோகன்EnglandEngland, India,NewZealand, West IndiesSachin TendulkarAnil KumbleFinalSachin TendulkarAnil KumbleSouth AfricaCraig McMillanDhoni

அதிரடிWest IndiesWest Indies, South Africa, India, New ZealandSachin TendulkarShaun PollockSemi-FinalSachin TendulkarMunaf PatelSouth AfricaSourav GangulyMark Boucher

ஜி -zNew ZealandNew Zealand, Australia, India, West IndiesRicku PontingMuralidharanSemi-finalSourav GangulyIrfan PathanNew ZealandRicky PontingGilChrist




நீங்களும் பங்குபெற இங்கே க்ளிக்கவும்

பரிசுத்தொகை : 100 அமெரிக்க டாலர்.
பதில் சொல்ல கடைசி நாள் மார்ச் 11 2007 11:59PM PST.



Friday, February 23, 2007

பரிசுப் போட்டிக்கான கேள்விகள்

கேள்வியெல்லாம் ரொம்ப சுலபமா கேட்டிருக்கேங்க. கிரிக்கெட் பத்தி அவ்வளவா தெரியாதவங்க கூட சுலபமா பதில் சொல்லிடலாம். தினசரி விளையாட்டுச் செய்திகள் பார்க்கிற/படிக்கிற அனுபவமே போதும். சரி சரி ரொம்ப பில்ட்-அப் கொடுக்காம் கேள்விக்கு வர்றேன்.

1. உலகக்கோப்பையை வெல்லப்போகும் நாடு எது?


2. அரை-இறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு நாடுகள் எவை?


3. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்களை (ஒரு போட்டியில் அல்ல,மொத்தமாக) குவிக்கப்போகும் மட்டையாளர் யார்?


4. இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை (ஒரு போட்டியில் அல்ல,மொத்தமாக) வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர் யார்?


5. இந்தியா எந்தச் சுற்று வரை முன்னேறும் ? (விடைகள் : முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்,சூப்பர் 8, அரை-இறுதி,இறுதி)


6. இந்திய அணியில் அதிக ரன்களை(மொத்தமாக) குவிக்கப்போகும் மட்டையாளர் யார்?


7. இந்திய அணியில் அதிக விக்கெட்களை (மொத்தமாக)வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர் யார்?


8. ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்களை குவிக்கப்போகும் அணி எது?


9. இந்த உலகக்கோப்பையில் அதிக சிக்ஸ்கள் (மொத்தமாக) அடிக்கப்போகும் வீரர் யார்?


10. இந்த உலகக்கோப்பையில் அதிக கேட்ச் (மொத்தமாக) பிடிக்கப்போகும் விக்கெட்-கீப்பர் யார்?


என்னங்க கேள்வியெல்லாம் ஈசி தான? சரி இப்போ விதிமுறைகள்

பதில்களை பின்னூட்டத்தில் இடவும். பின்னூட்டமாக இடுவதினால், ஏமாறவோ, ஏமாற்றவோ வாய்ப்பில்லை. முடிந்தவரை அனைத்து பதிகளையும் ஒரே பின்னூட்டத்தில் இடவும்.

பதில்கள் அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2007 11:59PM PST.

மார்ச் 12ம் தேதி அனைத்து பதிவர்களின் பதில்களும் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்படும்.ஏதேனும் தவறிருப்பின், தகுந்த ஆதாரங்களோடு(தங்களின் பின்னூட்டம்) சுட்டிக்காட்டினால் சரிசெய்யப்படும்.

போட்டிக்கான முடிவுகள் ஏப்ரல் 29,2007 அன்று அறிவிக்கப்படும்.

போட்டிக்கான பரிசுத்தொகை 100 அமெரிக்க டாலர்கள்.

உங்கள் பதில்களை பின்னூட்டமாக அளித்த பிறகு ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், மீண்டும் அனைத்து பதில்களையும் பின்னூட்டத்தில் இடவும். இது பதில்களை சரிபார்க்க வசதியாக இருக்கும்.

ஒருவர் எத்தனை முறை பதிலளித்தாலும், இறுதியாக அளித்த பதிலே ஏற்றுக்கொள்ளப்படும்.

யாராவது நடுவராக இருக்க விரும்பினாலோ, யாரையாவது நடுவராக்க விரும்பினாலோ தயங்காமல் தெரியப்படுத்தவும்.

ஏடாகூடமான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. உதாரணம்
1.உலகக்கோப்பையை வெல்லப்போகும் நாடு எது?
இறுதிப்போட்டியில் வெல்லும் நாடு
2. அரைஇறுதிக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எவை?
சூப்பர் 8ல் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் நாடுகள்
அருமை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனிக்க :))

அனானி/அதர் ஆப்ஷன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

10 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்பவருக்கு பரிசு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

யாரும் 10 கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லாத பட்சத்தில், அடுத்து அதிக கேள்விகளுக்கு பதில் சொல்லியவருக்கு பரிசளிக்கப்படும். ஆனால் இவர் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது சரியான பதில் சொல்லியிருக்கவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

வெற்றி பெற்றவர் விரும்பும் பட்சத்தில் பரிசுத்தொகை 'உதவும் கரங்கள்' போன்ற சேவை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

ஏதேனும் முக்கியமான் விதிமுறை விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.


என்னங்க நான் ரெடி, நீங்க ரெடியா?? சீக்கிரம் உங்க பதிலை பின்னூட்டமிடுங்க, பரிசை தட்டிட்டு போங்க!!

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

Thursday, February 22, 2007

100 டாலர் பரிசுப் போட்டி !!

இந்தியா உலகக்கோப்பைய ஜெயிக்குதோ இல்லையோ, நம்ம பதிவுலக நண்பர்கள் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டில 100 டாலர்* ஜெயிக்க நல்ல வாய்ப்பு.





நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த போட்டில கேட்கப்போற 10 சுலபமான(?) கேள்விகளுக்கு பதில் சொல்றது தான்.கிரிக்கெட் பத்தி அவ்வளவா தெரியாதவங்க கூட சும்மா இந்தியா,டெண்டுல்கர்னு பதில அடிச்சு விடலாம். அதிர்ஷ்டமிருந்தா ஜெயிக்க வாய்ப்பிருக்கு.

வாங்க நண்பர்களே, வந்து உங்க திறமைய காண்பிச்சு கலக்குங்க.

போட்டியை பற்றிய விதிமுறைகள் மற்றும் கேள்விகள் மிக விரைவில்....





*முருகன் டாலரோ பிள்ளையார் டாலரோ இல்லைங்க, அமெரிக்க டாலர் !!.